
சிரஞ்சீவியை இயக்க கனவு கண்ட ஷங்கர்
ஒரு காலகட்டத்தில் ஷங்கர் இயக்கத்தில் நடிக்க தென்னிந்தியாவில் பல உச்ச நடிகர்கள் ஆர்வமாக இருந்தனர். இப்போது கேம் சேஞ்சர் புரொமோசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷங்கர் கூறியதாவது, "தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் ஆன சிரஞ்சீவியை வைத்து படம் இயக்குவதற்காக கடந்த 15 வருடங்களாக கனவு கண்டேன். ஆனால் அது இதுவரை சாத்தியமாகவில்லை. அதேபோல் கொரோனா காலகட்டத்தில் பிரபாஸிடம் ஒரு கதை ஒன்று கூறினேன். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அதுவும் நிறைவேறவில்லை" என தெரிவித்துள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!