ஆதி புருஷ் - ஜெய் ஸ்ரீராம் பாடல் வெளியீடு
மே 20, 2023
Advertisement
ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ், கிரித்தி சனோன், சைப் அலிகான் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் "ஆதி புருஷ்" படத்தின் "ஜெய் ஸ்ரீராம்" பாடல் சற்று முன் யு டியூபில் வெளியிடப்பட்டது. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் அப்பாடல் வெளியாகி உள்ளது.
அஜய் - அதுல் இசையமைப்பில் உருவாகியுள்ள அப்பாடலை முரளிதரன் எழுதியிருக்கிறார். பாடலை ஆண் பாடகர்கள் சிலரும், பெண் பாடகர்கள் சிலரும் குழுவாகப் பாடியிருக்கிறார்கள்.
காட்டில் ராமன், லட்சுமணன் ஆகியோர் அனுமன் மற்ற வானரக் கூட்டங்களுடன் நடந்து செல்ல, ராமன் வருகைக்காக, இலங்கையில் இராவணனால் சிறைபிடிக்கப்பட்ட சீதா காத்திருக்கும் காட்சிகள் அப்பாடலில் இடம் பெற்றுள்ளது. பாடலில் உள்ள விஎப்எக்ஸ் காட்சிகள் நல்ல தரத்தில் அமைந்துள்ளது.
ஜுன் மாதம் 16ம் தேதி "ஆதி புருஷ்" உலகம் முழுவதும் வெளியாகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…