
அடடே சுந்தரா டிரைலர் மே 30ல் வெளியீடு
மே 28, 2022
Advertisement
தெலுங்கில் நானி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "அடடே சுந்தரா". விவேக் ஆத்ரேயா என்பவர் இயக்கியுள்ளார். இப்படத்தில் நானிக்கு ஜோடியாக நஸ்ரியா நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் நதியா, ரோகிணி ஆகியோர் நடித்துள்ளனர். விவேக் சாகர் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் வெளியாக உள்ள இப்படம் வரும் ஜுன் 10- ஆம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் மே 30ல் வெளியாகும் என அறிவித்துள்ளனர். தெலுங்கு மட்டுமல்லாது தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியிட உள்ளனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!