
விஜய்யுடன் நடிக்கும் குழந்தை நட்சத்திரங்கள்!
மே 28, 2022
Advertisement
நடிகர் விஜய் தற்போது தெலுங்கு பட இயக்குனர் வம்சி பைடபள்ளி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாக இருக்கும் படத்தில் நடிக்கிறார். தில் ராஜு தயாரிக்கிறார். விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷாம், யோகிபாபு ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் விரைவில் தொடங்கவுள்ளது. இந்த படத்தில் ஹர்ஷிதா கார்த்திக் மற்றும் அத்வைத் வினோத் ஆகிய இரு குழந்தை நட்சத்திரங்கள் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!