
குடும்பத்தினர் மீது அவதூறு : நடிகை ரோஜா வேதனை
இந்நிலையில் சமீபத்தில் ரோஜா அளித்த ஒரு பேட்டியில், தன்னைப் பற்றியும் தனது குடும்பத்தார் பற்றியும் சோசியல் மீடியாவில் வெளியாகும் ஆபாச புகைப்படங்கள் குறித்து தனது வேதனையை பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், சினிமா மற்றும் அரசியலில் பல பிரச்சனைகளை எதிர் கொண்டு வருகிறேன். சமீப காலமாக சோசியல் மீடியாவில் என்னைப் பற்றியும், எனது குடும்பத்தார் பற்றியும் அவதூறு செய்திகளை பரப்புகிறார்கள். இது மிகுந்த வேதனை அளிக்கிறது. என்னுடைய பிறந்த நாளில் எனது சகோதரர் எனக்கு முத்தமிட்டதை கூட ஆபாசமாக சித்தரித்தார்கள்.
என் மகளின் புகைப்படத்தை மார்பிங் செய்தும், எனது புகைப்படங்களை ஆபாசமாகவும் வெளியிட்டு வருகிறார்கள். அதை பார்த்து எனது மகள் மிகுந்த வேதனைப்படுகிறாள். எங்களுக்கும் மனசு இருக்கிறது, குடும்பம் இருக்கிறது என்பதை இதுபோன்ற மோசமான செயல்பாடுகளில் ஈடுபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதனால் வேதனைப்படும் எனது பிள்ளைகளுக்கு, பிரபலங்களுக்கு இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படுவது சகஜமான ஒன்றுதான். அதனால் இதை எல்லாம் கண்டும் காணாமல் போய்விட வேண்டும் என்று அவர்களுக்கு சொல்லி புரிய வைத்து வருகிறேன் என்று அந்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார் ரோஜா.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!