
நடிகர் சத்யராஜின் தாயார் காலமானார்
ஆக 11, 2023
Advertisement
நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள் (94) வயது மூப்பின் காரணமாக காலமானார். தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக நடித்து முன்னணி நடிகராக வலம் வந்தவர் சத்யராஜ். தற்போது குணச்சித்ர வேடங்களில் தமிழ் சினிமா மட்டுமின்றி பிறமொழிகளிலும் நடித்து வருகிறார். சத்யராஜின் தாயார் நாதாம்பாள் காளிங்கராயர். இவர் கோவையில் வசித்து வந்தார். வயது மூப்பின் காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு கோவையில் காலமானார். நாதாம்பாளுக்கு சத்யராஜ் என்ற மகனும், கல்பனா மன்றாடியார், ரூபா சேனாதிபதி ஆகிய இரு மகள்களும் உள்ளனர். செய்தியறிந்து ஐதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்த சத்யராஜ் கோவை விரைந்துள்ளார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!