கபாலி ரஜினிகாந்த் இல்லை, ராம்கி இது...
பிப் 18, 2021
Advertisement
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து 2016ம் ஆண்டு வெளியான படம் "கபாலி". அப்படத்தில் இளம் பெண்ணுக்கு அப்பா கதாபாத்திரத்தில் வயதான தோற்றத்தில் நடித்தார். வெள்ளை தாடி, மீசை, முடி, கூலிங்கிளாஸ் என அவருடைய தோற்றம் வயதானவராக இருந்தாலும் அப்படத்தில் மிகவும் ஸ்டைலாக இருந்தது. அந்தத் தோற்றம் ரஜினி ரசிகர்களை மிகவும் கவர்ந்த ஒன்றாக இருந்தது.
இன்று சென்னையில் நடைபெற்ற "வேட்டை நாய்" என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் "கபாலி" கெட்டப்பில் நடிகர் ராம்கி வந்து பலரையும் ஆச்சரியப்படுத்தினார். 1987ம் ஆண்டு வெளியான "சின்னப் பூவே மெல்லப் பேசு" படத்தில் கதாநயாகனாக அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் நடித்தவர் ராம்கி. அதன்பின் அவர் நடிப்பதை குறைத்துக் கொண்டார். கடைசியாக விஷால் நடித்த "ஆக்ஷன்" படத்தில் நடித்தார். தற்போது "வேட்டை நாய்" படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!