நடிகர் ‛பூ ராமு மறைவு
ஜூன் 27, 2022
Advertisement
‛‛பூ, தங்கமீன்கள், நீர்ப்பறவை"" உள்ளிட்ட பல படங்களில் நடித்த ராமு(60) காலமானார்.
சினிமாவில் யதார்த்தமாக, வாழ்வியலை அப்படியே பிரதிபலிக்க கூடிய நடிகர் என பெயர் எடுத்தவர் ராமு. சசி இயக்கிய ‛பூ" படத்தின் மூலம் பிரபலமாக ‛பூ" ராமு என அழைக்கப்பட்டார். தொடர்ந்து நீர்ப்பறவை, தங்கமீன்கள், பரியேறும் பெருமாள், கர்ணன், சூரரைப்போற்று, கோடியில் ஒருவன் என பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த படங்கள் குறைவு என்றாலும் அவர் நடித்த வேடங்கள் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தன. நாடக கலைஞர், நடிகர், எழுத்தாளர், பேச்சாளர் என பன்முகம் கொண்டவர் ராமு.
இந்நிலையில் மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக சென்னை, அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தீவிர கண்காணிப்பு பிரிவில் இருந்த அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக காலையில் செய்தி வந்தது. இந்நிலையில் மாலை 7 மணியளவில் அவரது உயிர் சிகிச்சை பலன் இன்றி பிரிந்தது.
கம்யூனிசத்தில் அதிக பற்று கொண்ட ராமுவிற்கு ஒரு மனைவியும், மகளும் உள்ளனர். இவரது சொந்த ஊர் சென்னையை அடுத்த உள்ள ஊரப்பாக்கம் ஆகும். அவரின் இறுதிச்சடங்கு நாளை(ஜூன் 28) செவ்வாய் அன்று அவரது சொந்த ஊரில் நடைபெறுகிறது.
ராமுவின் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!