
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான்
ஏப் 17, 2024
Advertisement
கடந்த லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வி அடைந்த நடிகர் மன்சூரலிகான் இந்த லோக்சபா தேர்தலிலும் வேலூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். கடந்த ஒரு மாதமாகவே அவர் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். இன்று மாலையோடு தேர்தல் பிரச்சாரம் முடியும் நிலையில், வேலூரில் உள்ள குடியாத்தம் பகுதி கிராமங்களில் இன்று காலை பிரச்சாரம் செய்திருக்கிறார் மன்சூரலிகான். அப்போது அவருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதை அடுத்து அவரது கட்சியின் தொண்டர்கள் குடியாத்தத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரை அனுமதித்துள்ளார்கள். என்றாலும் அவருக்கு உண்மையிலேயே நெஞ்சுவலிதானா? இல்லை வேறு பிரச்சனையா? என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!