
நடிகர் பாலா இரண்டாவது திருமணம்
செப் 05, 2021
அன்பு, காதல் கிசுகிசு, வீரம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பாலா. இயக்குனர் சிவாவின் தம்பியான இவருக்கு 2010ல் அம்ருதாவுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். 2019ல் விவாகரத்து பெற்று பிரிந்தனர். தற்போது மலையாளம், தமிழ் படங்களில் நடித்து வருகிறார் பாலா. கடந்த சில தினங்களாகவே பாலா இரண்டாவது திருமணம் செய்ததாக செய்தி பரவியது. ஆனால் அதுப்பற்றி அவர் எதுவும் கூறவில்லை. இந்நிலையில் கேரளாவை சேர்ந்த டாக்டர் எலிசபெத் என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களின் திருமண வரவேற்பு கேரளாவில் இன்று(செப்.,5) நடந்தது.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!