
இரண்டு வாரமாக தாக்குப் பிடிக்கும் கூலி
நேற்றோடு இப்படம் இரண்டு வாரங்களை நிறைவு செய்து மூன்றாவது வாரத்தில் நுழைந்துள்ளது. நாளையும், நாளை மறுதினமும் விடுமுறை நாள் என்பதால் ஓரளவிற்கு தியேட்டர்களில் வசூல் இருக்கும். திங்கள் கிழமை முதல் அது குறைவதற்கு நிறைய வாய்ப்புள்ளது.
பாக்ஸ் ஆபீஸ் தகவல்படி படம் 500 கோடி வசூலைக் கடந்ததாகச் சொன்னார்கள். ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. தமிழகத்தைத் தவிர மற்ற மாநிலங்களிலும் இப்படம் லாபக் கணக்கை ஆரம்பித்துவிட்டது. இந்தக் காலத்தில் எவ்வளவு பெரிய நடிகர்களின் படமாக இருந்தாலும் ஒரு வாரம் வரை ஓடுவதே பெரிய விஷயாமக உள்ளது. "கூலி" படம் இரண்டு வாரம் தாக்குப் பிடித்து ஓடிவிட்டது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!