காசியில் நிறைவடைந்த வெற்றி படம்
பிப் 12, 2024
Advertisement
8 தோட்டாக்கள், ஜிவி, ஜோதி உள்ளிட்ட படங்களில் நடித்த வெற்றி தற்போது நடித்து வரும் படம் "ஆலன்". ஜெர்மனியைச் சேர்ந்த மதுரா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் விவேக் பிரசன்னா, ஹரீஷ் பெரடி, அருவி மதன்குமார், கருணாகரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். 3 எஸ் பிக்சர்ஸ் சார்பில் சிவா தயாரித்து, இயக்குகிறார். விந்தன் ஸ்டாலின் ஒளிப்பதிவு செய்கிறார், மனோஜ் கிருஷ்ணா இசை அமைக்கிறார். இந்தியாவின் பல பகுதிகளில் படமாக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு காசியில் நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது.
படம் பற்றி இயக்குனர் சிவா கூறும்போது, “ஒரு முழுமையான ரொமான்ஸ் படமாக மட்டுமில்லாமல் வாழ்வின் அழகை சொல்லும் ஒரு அழகான டிராமாவாக இப்படம் உருவாகியுள்ளது. "ஆலன்" என்பதன் பொருள் படைப்பாளி. சிறுவயதில் இருந்தே எழுத்து மீது ஆர்வம் கொண்டு எழுத்தாளனாகும் கனவில் வாழும் ஒருவன், அவனின் பதினைந்தாம் வயதில் நடக்கும் ஒர் எதிர்பாராத நிகழ்வு, அவனின் காதல் ஆகியவற்றை உள்ளடக்கிய அவனின் 40 வயது வரையிலான அவனது வாழ்வின் பயணம்தான் இப்படம். வாழ்வின் எதிர்பார நிகழ்வுகள், ஒரு நதியாக அது அடித்துச் செல்லும் பயணம், காதல் ஆன்மிகம் எழுத்து என ஒரு ஆத்மார்த்தமான படைப்பாக இது இருக்கும் என்றார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…