
ஓடிடியில் வந்துள்ள புதிய போட்டி
நெட்பிளிக்ஸ், அமேசான், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஜீ 5, ஆஹா ஆகிய ஓடிடி தளங்களுக்கிடையே போட்டி அதிகமானது. புதிய படங்கள், வெப் தொடர்கள், நிகழ்ச்சிகள் என சாட்டிலைட் டிவிக்களைப் போல அவர்களும் சில பல கோடிகள் கொடுத்து படங்களை வாங்கவும், தொடர்களைத் தயாரிக்கவும் செய்தார்கள்.
இப்போது அவற்றுடன் ஜியோ சினிமாவும் போட்டியில் இறங்கியுள்ளது. தற்போது நடைபெற்று வரும் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளுக்கான ஓடிடி உரிமையை "ஜியோ சினிமா" பெற்றதன் மூலம் அது பிரபலமானது. அதைத் தொடர்ந்து புதிய படங்களை வாங்குவதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் புதிய படங்களைப் பேசி வருகிறார்களாம்.
ஹிந்தியில் ஷாகித் கபூர், டயானா பென்ட்ட்டி, சஞ்சய் கபூர் நடித்துள்ள "பிளடி டாடி" என்ற படத்தை ஜுன் 6ம் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடுகிறது ஜியோ சினிமா. தொடர்ந்து மற்ற மொழிகளிலும் இப்படி நேரடி வெளியீட்டிற்காக ஆலோசனை நடந்து வருகிறதாம்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!