ஒரே நேரத்தில் தயாராகும் 2 ஐயப்பன் படங்கள்
பிப் 28, 2026
Advertisement
இப்போது புராணங்கள், இதிகாசங்கள், பக்தி சார்ந்த படங்களை பிரமாண்ட படங்களாக தயாரிப்பது புதிய டிரண்டாகி உள்ளது. அந்த வரிசையில் சபரிமலை ஐயப்பன் பற்றிய இரண்டு படங்கள் ஒரே நேரத்தில் தயாராகிறது.
"தத் தவம் அஸி", "ஆர்ய கேரள வர்மன்" என்ற பெயரில் இரு படங்கள் தயாராகின்றன. "தத் தவம் அஸி" என்றல் அதுவாகவே நீ இருக்கிறாய் என்று பொருள், இந்த படங்களை வெங்கட் பிரபு படங்களின் இணை தயாரிப்பாளராக இருந்த ஜே.கே.சரவணா தயாரிக்கிறார்.
தத் தவம் அஸி படம் சமகாலத்தில் நடக்கும் ஆன்மிகம் கலந்த ஆக்ஷன் கதையுடன் உருவாகிறது. சுவாமி ஐயப்பனின் தீவிர பக்தரின் வாழ்க்கை, நம்பிக்கை, பக்தி, ஆன்மிக பயணத்தை மையப்படுத்தி உருவாக்கப்படுகிறது. இதை 100 கோடி ரூபாய் வசூலித்த சூப்பர் ஹிட் படமான "மாளிகப்புரம" படத்தை இயக்கிய விஷ்ணு சசி சங்கர் இயக்குகிறார்.
"ஆர்ய கேரள வர்மன்" படம், இதுவரை அதிகமாக அறியப்படாத சுவாமி ஐயப்பனின் சரிதையாக உருவாக்கப்படுகிறது. 16ம் நூற்றாண்டின் வரலாற்று பின்னணியில் அவரது வீரத்தையும், ஆன்மிக தத்துவத்தையும் மையப்படுத்தி உருவாகும் இப்படத்தை ஜே.கேசரவணா, ஆதித்யா தங்கிராலா இணைந்து இயக்குகின்றனர். இரு படங்களுக்கும் பிரேம்ஜி இசையமைக்கிறார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!