
25 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய 1 ரூபாய் அட்வான்ஸ்
அப்போது எதிர்காலம் குறித்து பேசுகையில் "நான் முதலில் படம் இயக்கினால் அதற்கு நீதான் ஒளிப்பதிவு செய்ய வேண்டும்" என என்னிடம் அவர் கேட்டுக் கொண்டார். உடனே அவருடைய பையில் இருந்து ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து, " இதுதான் உனக்கான அட்வான்ஸ்" என்றார். அதற்குப் பிறகு 25 ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்போது அவர் இயக்குனர் ஆன பின் திடீரென்று அலுவலகத்திற்கு வந்து படத்தில் என்னிடன் பணியாற்ற சம்மதமா எனக் கேட்டார். அப்போது அவரிடம், "நீ கொடுத்த அட்வான்ஸ் அப்படியே இருக்கிறது. வா படப்பிடிப்புக்கு செல்லலாம்" என்றேன்.
ஊட்டி என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது பாலுமகேந்திரா தான். அவர் காட்சிப்படுத்தாத லொகேஷன்களை தேடித் தேடி இந்த படத்திற்காக பதிவு செய்திருக்கிறோம். இருபது ஆண்டுகள் கழித்து கலர்புல்லாக கிளாஸியாக இந்த படத்தை உருவாக்கி இருக்கிறேன். நான் பெரிதும் மதிக்கும் பாலுமகேந்திராவிற்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த படத்தை அவருக்கு அர்ப்பணிக்கிறேன்," என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!