
லாக்டவுனில் நடிகையாக மாறிய தேஜூ அஸ்வினி
அதில், ""நான் பிவிஆரில் சேல்ஸ் பெண் ஆக பணியாற்றிக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் சில புதிய வாய்ப்புகள் என்னைத் தேடி வந்தது. அதனால், ஏன் இந்த வேலையை விட்டுவிட்டு முழுமையாக தேடி வந்த வாய்ப்புகளில் கவனம் செலுத்தக்கூடாது? என சிந்தித்தேன் . அதன் பின்னர் வேலையை விட்டு வெளியேறினேன். ஆனால், அது கொரானா நோய் இருந்த காலம் என்பதால், லாக்டவுன் அறிவிக்கப்பட்டு அனைத்தும் முழுமையாக முடங்கிப் போனது.
எனக்கு ஆரம்பத்திலிருந்து மீடியா துறையின் மீது அதிக ஆர்வம் இருந்தது. அந்த ஆர்வம் தான் அந்த கடினமான காலகட்டத்திலும் எனக்கு துணையாக இருந்தது. அப்போது நாங்கள் யூடியூபில் லாக்டவுன் சீரிஸ் என்கிற ஒரு தொடர் நிகழ்ச்சியை உருவாக்கினோம்." இது தான் தன்னை நடிகையாக அடுத்த கட்டத்திற்கு கொண்டு வந்து சேர்த்தது"" என தேஜூ அஸ்வினி தெரிவித்துள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!