
பெத்தி: தெலுங்கில் மட்டுமே லாபகரமான வெற்றி ?
ராம்சரண், ஜான்வி கபூர், சிவராஜ்குமார் மற்றும் பலர் நடிப்பில் புச்சிபாபு சனா இயக்கத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளிவந்த தெலுங்குப் படம் "பெத்தி". பான் இந்தியா படமாக வெளியான இந்தப் படம் 2026ல் வெளியான தென்னிந்தியப் படங்களின் வசூலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
400 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்திருந்தாலும் இப்படம் தெலுங்கில் மட்டுமே வசூல் ரீதியான வெற்றியைப் பெற்றுள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் பான் இந்தியா வெற்றியைப் பெற முடியவில்லை.
தெலுங்கு மாநிலங்களின் வசூலில் குறுகிய காலத்தில் 200 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. மற்ற மாநிலங்களைப் பொறுத்தவரையில் கர்நாடகாவில் சுமார் 15 கோடி வசூலித்துள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹிந்தியில் இந்தப் படம் வரவேற்பைப் பெறவில்லை. தமிழ் மற்றும் மலையாளத்தில் மிகவும் மோசம் என்கிறார்கள்.
வெளிநாடுகளில் 50 கோடி வசூல் என்று சொல்கிறார்கள். ஆனாலும் அமெரிக்காவில் இப்படம் லாபகரமான வசூலைப் பெற வாய்ப்பில்லை எனத் தகவல்.
"ஆர்ஆர்ஆர்" படத்திற்குப் பிறகு மீண்டும் உலக அளவிலான ஒரு வெற்றி ராம் சரணுக்குக் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை என்கிறது டோலிவுட் வட்டாரம்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!