
விவாகரத்துக்கு பின்னரும் ஜோடியாக சுற்றும் ஆமீர்கான் தம்பதி
15 வருடங்கள் இவர்களது திருமண வாழ்க்கை கடந்த நிலையில், அதற்கு அடையாளமாக ஒரு மகனும் இருக்கிறார். ஆனால் சமீபத்தில் தாங்கள் இருவரும் பிரிய போவதாகவும் விவாகரத்திற்கு விண்ணப்பித்து விட்டதாகவும் ஆமீர் கானும் கிரண் ராவும் அறிவித்தனர். அதேசமயம் நாங்கள் நண்பர்களாக பழகுவதற்கு எந்தத் தடையும் இல்லை என்றும் தங்களது மகனுக்கு நல்ல பெற்றோராக இருப்போம் என்றும் கூறினர். அதை நிரூபிப்பது போல ஆமீர்கான் நடித்து வரும் லால் சிங் சத்தா படப்பிடிப்பு லடாக்கில் நடந்தபோது அவருக்கு உதவியாக கிரண் ராவும் உடன் சென்றிருந்தார். படப்பிடிப்பு தளத்தில் இவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அந்த சமயத்தில் வைரலாக பரவின.
இந்த நிலையில் தாங்கள் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தவர்கள் போலவே அல்லாமல், தனது நண்பர் ஒருவரின் வீட்டு திருமணத்திற்கு கிரண் ராவுடன் ஜோடியாக சென்று கலந்து கொண்டுள்ளார் ஆமீர் கான். ஒருவேளை மௌன ராகம் படத்தில் வருவதுபோல பிரிந்து வாழும்போதே நண்பர்களாக பழகினால் மீண்டும் தங்களுக்குள் சேர்ந்து வாழும் அளவுக்கு புரிதல் ஏற்படும் என நினைக்கிறார்களோ என்னவோ.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!