
மன அழுத்தத்தால் படப்பிடிப்பில் மயங்கி விழுந்த சந்தானம் ஹீரோயின்
இவர் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. படப்பிடில் கலந்து கொண்ட நுஷ்ரத் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நுஷ்ரத் உடல்நிலை பற்றி பல்வேறு தகவல்கள் வெளிவந்தது.
இந்த நிலையில் அவர் தனது உடல்நிலை குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: எனக்கு மன அழுத்த பிரச்சினை இருக்கிறது. இதற்கான நான் சிகிச்சை எடுத்து வருகிறேன். இந்த நிலையில் 20 நாட்களுக்கு மேல் தொடர்ச்சியாக படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். இதனால் மன அழுத்தமும், பதற்றமும் அதிகமாகி மயங்கி விழுந்தேன்.
எனக்கு கொரோனா உள்ளிட்ட வேறு எந்த உடல் பிரச்சினையும் இல்லை. தற்போது ஓய்வில் இருக்கிறேன். டாக்டர்கள் 15 நாள் ஓய்வெடுக்க சொல்லியிருக்கிறார்கள். என் பெற்றோர் அருகில் இருந்து கவனித்து வருகிறார்கள். என்று அவர் தெரிவித்திருக்கிறார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!