
நகைக்கடை மோசடி ; சல்மான்கானுக்கு தொடர்பு இல்லை
சல்மான் கான் நடத்தி வரும் "பீயிங் ஹ்யூமன்" என்கிற அறக்கட்டளை சார்பாக இருவர், அருண் குப்தாவை தொடர்பு கொண்டு, இந்த அறக்கட்டளையின் கீழ் இயங்கும் விதமாக நகைக்கடை கிளை ஒன்றை ஆரம்பித்து, அதன்மூலம் புதிய வியாபாரம் துவங்குங்கள் என்றும், அதை சல்மான்கான் வந்து அதை திறந்து வைப்பார் என்றும் கூறினார்களாம்.
அவர்கள் பேச்சை நம்பி பீயிங் ஹ்யூமன் ஜுவல்லரி என்கிற பெயரில் கடையை துவங்குவதற்காக சுமார் மூன்று கோடி ரூபாய் வரை முதலீடு செய்தாராம் அருண் குப்தா.. ஆனால் அவர்கள் சொன்னபடி செய்யவில்லை, அதனால் எனக்கு மூன்று கோடி நஷ்டமானது என அந்த புகாரில் குறிப்பிட்டிருந்தார் அருண் குப்தா
ஆனால் தற்போது ஸ்டைல் கோஷன்ட் என்கிற நகை தயாரிப்பு நிறுவனம் சல்மான்கானுக்கும் இந்த விவகாரத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என விளக்கம் அளித்துள்ளனது. சல்மான்கானின் பீயிங் ஹியூமன் அறக்கட்டளையின் குளோபல் பார்ட்னராக தாங்கள் இருப்பதாகவும் நகை உருவாக்கம், விற்பனை போன்றவற்றை தாங்கள் தான் மேற்கொண்டு வருவதாகவும் தற்போது புகார் அளித்திருக்கும் நபரின் நிறுவனத்துடன் 2018ல் தாங்கள் ஒப்பந்தம் போட்டிருப்பதாகவும் அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
மேலும் இந்த விஷயத்தில் சல்மான்கானுக்கோ அவரது தங்கைக்கோ எந்தவித தொடர்பும் இல்லை என கூறியுள்ள அந்த நிறுவனம், இந்த புகார் குறித்த தங்களது விளக்கங்களை சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கும் காவல்துறைக்கும் அனுப்பி இருப்பதாகவும் கூறியுள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!