
அனுஷ்கா, விராட் கோஹ்லி நிவாரண நிதிக்கு குவியும் ஆதரவு
வீடியோவில் அவர்கள் கூறுகையில், “கொரோனா இரண்டாவது அலையில் நமது நாடு போராடிக் கொண்டிருக்கிறது. நமது மருத்துவப் பாதுகாப்பு முறை கடும் சவாலை சந்தித்துக் கொண்டிருக்கிறது. மக்கள் பாதிப்படையவது எனது இதயத்தை நொறுக்குவதாக உள்ளது. அதனால், நானும் விராட்டும் "#InThisTogether" என்ற பிரச்சாரத்தை ஆரம்பித்து கொரோனா நிவாரண நிதியை வசூலிக்க முடிவு செய்துள்ளோம். இந்த நிலைமையிலிருந்து நாம் அனைவரும் ஒற்றுமையுடன் வெளியே வருவோம். இந்தியாவிற்காகவும், இந்திய மக்களுக்காகவும் உதவி செய்ய முன்வாருங்கள். இந்த மோசமான சூழலில் உங்களது உதவி பலரது உயிரைக் காப்பாற்றும்,” என அனுஷ்கா சர்மா, விராட் கோலி நேற்று வேண்டுகோள் விடுத்தார்கள்.
அவர்களது வேண்டுகோளுக்கு ரசிகர்கள் பெரும் ஆதரவைக் கொடுத்து வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் ரூ.3.6 கோடி நிதி கிடைத்துள்ளதாக அனுஷ்கா தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!