
கமல் பட நடிகை மீது தாக்குதல்
இந்நிலையில் சமீபத்தில் அவர் மர்ம நபர் ஒருவரால் தாக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: நான் ஜிம்மில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்தபோது ஒரு ஆண் என்னையே பார்த்ததை கவனித்தேன். எதற்காக இப்படி பார்க்கிறாய் என்று கேட்டேன். அந்த நபரோ, அது என் இஷ்டம் என்றார்.
அறை வேணுமா என்று நான் கேட்டதற்கு அறையேன் என்றார். உடனே நான் அவரை அறைந்தேன், பதிலுக்கு அவர் என்னை குத்திவிட்டார். இதையடுத்து எனக்கு மயக்கம் வந்துவிட்டது. மயக்கம் தெளிந்த உடன் என் அப்பாவை அழைத்து நடந்ததை கூறினேன். அவர் மூன்று நபர்களை அழைத்துக் கொண்டு வந்தார். என்னை தாக்கியவர் ஓடத் துவங்கினார். அப்பாவும் நண்பர்களும் அவரை துரத்தினார்கள். ஆனால் அந்த ஆள் தப்பி விட்டான். தொடர்ந்து நம் நாட்டில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே இருக்கிறது. என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!