
மோகன்லால் மகளுக்கு அமிதாப் பச்சன் வாழ்த்து
கடந்த பிப்-14ல் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு இந்த புத்தகத்தை வெளியிட்ட விஸ்மாயா, தன்னுடைய தந்தையின் மிக நெருங்கிய நண்பர்களுக்கும் தனது நட்பு வட்டாரத்திற்கும் இந்த புத்தகத்தின் பிரதிகளை அனுப்பி வைத்தார். அதில் நடிகர் அமிதாப் பச்சனும் ஒருவர். இந்தப்புத்தகத்தை படித்துவிட்டு விஸ்மாயாவின் இலக்கிய திறமையை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் அமிதாப்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “நான் ரொம்பவே வியக்கும் நடிகர் மோகன்லால், தனது மகள் விஸ்மாயா எழுதிய புத்தகம் ஒன்றை அனுப்பியுள்ளார். ரொம்பவே நுட்பமான, உணர்வுப்பூர்வமான பாடல்கள் மற்றும் ஓவியங்களின் பயணமாக இருக்கிறது இந்த படைப்பு... திறமை என்பது பரம்பரரை குணம்” என பாராட்டியுள்ளார். இவர் தவிர, நடிகர்கள் துல்கர் சல்மான், பிரித்விராஜ் உள்ளிட்டோரும் விஸ்மாயாவின் இந்த புதிய முயற்சிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!