
முன்னாள் பிரதமர் இந்திராவாக நடிக்கிறார் கங்கனா
இதுகுறித்து கங்கனா தனது டுவிட்டரில் எழுதியிருப்பதாவது: நான் இந்திராவாக நடிக்கப் போகிறேன். இதற்காக ஸ்கிரிப்ட் அமைக்கும் பணி இறுதிகட்டத்தில் இருக்கிறது. இது அவரின் முழுமையான வரலாற்று படம் அல்ல. அவரது வாழ்க்கையின் சில முக்கியமான காலகட்டங்கள், அரசியல் நிகழ்வுகள் பற்றிய படம். இந்திராவின் அரசியல் நிலைப்பாடுகள், செயல்பாடுகளை இளைய தலைமுறைக்கு சொல்லும் விதமாக இந்தப் படம் இருக்கும். பல முக்கிய நடிகர்கள் இந்த படத்தின் ஒரு பகுதியாக இருப்பார்கள், படம் ஒரு புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. என்று எழுதியிருக்கிறார்.
அவசரநிலை பிரகடனம், பொற்கோவில் தாக்குதல், இந்திரா படுகொலை ஆகியவை பற்றிய படம் என்று கூறப்படுகிறது. கங்கனா நடிக்கும் ரிவால்வார் ராணி படத்தை இயக்கும் சாய் கபீர் இயக்குவார் என்று தெரிகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!