
‛பார்டர் 2வில் தில்ஜித் தோசன்ஜ் முதல் பார்வை வெளியீடு
இந்த படத்தில் நடிக்கும் நடிகர்களின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில் தற்போது தில்ஜித் தோசன்ஜ் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். போர்க்கள பின்னணியில் ஒரு போர் விமானத்தில் அமர்ந்திருக்கும் தில்ஜித், அசைக்க முடியாத தைரியத்துடனும், துல்லியத்துடனும் தேசத்தை பாதுகாக்கும் ஒரு இந்திய விமானப்படை அதிகாரியாக, கடுமையான தோற்றத்துடன் காணப்படுகிறார். அதோடு அவரின் தேசபக்தியும் படத்தின் போஸ்டரில் வெளிப்படுகிறது.
இந்திய விமானப்படை மற்றும் வான்வழி நடவடிக்கை மற்றும் நிலத்திற்கு அப்பால் பரவும் வீரத்தின் கதையை உறுதியளிக்கிறது. தற்போது படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன. குடியரசு தினத்தை முன்னிட்டு வரும், 2026, ஜன., 23ம் தேதி படம் ரிலீஸாகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!