
இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி மீது ராஜஸ்தானில் எப்ஐஆர் பதிவு
இது குறித்து போலீசார் தரப்பில் கூறும்போது, இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ராஜஸ்தானில் உள்ள பிகானிர் நகரத்தில் நடைபெற்று வந்தது. இந்தப் பகுதியில் படப்பிடிப்பு நடத்துவதற்கு தேவையான அரசு அனுமதி, லொகேஷன் ஏற்பாடுகள் மற்றும் படக்குழுவிற்கு தேவையானவற்றை கவனிக்கும் நிர்வாகம் ஆகியவற்றை ரத்னா பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் பிரதீக் ராஜ் மாத்தூர் என்பவரிடம் ஒப்படைத்து இருந்தார். ஆனால் எந்தவித பணமும் செட்டில் செய்யாமல் இடையிலேயே தன்னை சஞ்சய் லீலா பன்சாலி கழட்டிவிட்டார் என்றும் இது குறித்து அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு நியாயம் கேட்க சென்ற போது தன்னுடைய மேனேஜர்களை வைத்து மிரட்டியதுடன் தாக்கவும் செய்தார் என்றும் புகாரளித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது..
அதேசமயம் இது குறித்து ஆரம்பத்திலேயே காவல்துறையில் புகார் அளித்தும் அவர்கள் அதை ஏற்க மறுத்துள்ளனர் என்றும் அதன் பிறகு நீதிமன்றம் சென்று புகார் மனு அளித்த பின்னரே நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் சஞ்சய் லீலா பன்சாலி மீது தற்போது எப்ஐஆர் பதியப்பட்டுள்ளது என்றும் சொல்லப்படுகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!