
கல்கி 2898 ஏடி ஓராண்டு நிறைவு : அமிதாப்பச்சன் வெளியிட்ட பதிவு
அதில், இப்படி ஒரு சிறந்த படத்தில் பங்கெடுத்தது பெருமையாக உள்ளது. வைஜெயந்தி பிலிம்ஸின் பெரியோர்களின் ஆசிகள் மறக்க முடியாது. அவர்கள் மீண்டும் எப்போது அழைத்தாலும் இந்த பிராஜெக்ட்டில் நடிப்பதற்கு தான் தயாராக இருப்பதாக பதிவிட்டுள்ளார் அமிதாப்பச்சன்.
இப்படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. மேலும் இந்த படத்தில் பிரபாஸ் கர்ணன் வேடத்திலும், அமிதாப்பச்சன் அஸ்வத்தாமன் வேடத்திலும் நடித்திருந்த நிலையில், அந்த கதாபாத்திரங்கள் குறித்து பலதரப்பட்ட கேள்விகளை எழுப்பப்பட்டது. ஆனால் அந்த கேள்விகளுக்கான விடை கல்கி படத்தின் இரண்டாம் பாகத்தில் கிடைக்கும் என்பது தெரியவந்துள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!