
ரூ.125 கோடி வரி கட்டிய அமிதாப்பச்சன்
சினிமாவில் நடிப்பது, விளம்பரங்களில் நடிப்பது, டிவி நிகழ்ச்சி தொகுத்து வழங்குவது என அவரது வருமானம் இருந்து வருகிறது. முன்பெல்லாம் இந்திய சினிமா நடிகர்கள் வருமான வரியை வருடா வருடம் கட்டாமல் பாக்கி வைப்பது வழக்கம்.
நிதியாண்டு முடிந்த பின் அதை வருமான வரித் துறை ஒரு பெரிய பட்டியலாகவே வெளியிடும். ஆனால், இப்போதெல்லாம் பெரும்பாலும் அனைத்து நடிகர்களும் வருமான வரியை ஒழுங்காகவே கட்டிவிடுகிறார்கள். ஒரு சிலர் மட்டுமே பாக்கி வைக்கிறார்கள் எனத் தகவல்.
இந்திய அளவில் இந்த ஆண்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக அல்லு அர்ஜுன் இருப்பதாகத் தகவல். அவருக்கு அடுத்து விஜய், ஷாரூக்கான், ரஜினிகாந்த், ஆமீர்கான், பிரபாஸ், அஜித், சல்மான்கான், கமல்ஹாசன் ஆகியோர் உள்ளனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!