
என் பெயரை பயன்படுத்தி அரசு திட்டத்தில் மோசடி : கண்டித்த சன்னி லியோன்
சன்னி லியோனின் பெயரில் வீரேந்திர ஜோஷி என்ற நபர் 1000 ரூபாய் உதவி தொகையை பெற்று வருவது தெரியவந்துள்ளது. அதையடுத்து அந்த நபர் கைது செய்யப்பட்டார். அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதனை அறிந்த சன்னி லியோன் இது குறித்து வெளியிட்ட பதிவில், "சத்தீஸ்கரில் என் பெயரையும், என் அடையாளத்தையும் தவறாக பயன்படுத்தி பெண்களுக்கு பயனளிக்கும் அரசின் திட்டத்தை தவறாக பயன்படுத்தி இருப்பது எனக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை வன்மையாக கண்டிக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!