
சின்னத்திரை நடிகை இந்திய அழகியாக தேர்வு
மிஸ் இந்தியா 2024ம் ஆண்டு அழகி போட்டி மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில், மாநில அளவில் வெற்றி பெற்ற 30 அழகிகள் கலந்து கொண்டனர். பல சுற்றுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் "மிஸ் இந்தியா 2024" பட்டத்தை நிகிதா போர்வால் பெற்றார். தாத்ரா நகர் ஹைவேலியை சேர்ந்த ரேகா பாண்டே 2-வது இடத்தையும், குஜராத்தை சேர்ந்த ஆயுஷி தோலாக்கியா 3-வது இடத்தையும் பிடித்தனர். கடந்த ஆண்டு மிஸ் இந்தியா அழகி பட்டம் வென்ற நந்தினி குப்தா நிகிதாவுக்கு கிரீடம் சூட்டி கவுரவித்தார். முன்னாள் மிஸ் இந்தியா அழகியும், நடிகையுமான நேகா தூபியா, நிகிதா போர்வாலுக்கு சால்வை அணிவித்தார்.
மிஸ் இந்தியா அழகி பட்டம் வென்றது குறித்து நிகிதா கூறுகையில், “இந்த உணர்வு என்னால் விவரிக்க முடியாததாக இருக்கிறது. கிரீடத்தை அணிந்து கொள்வதற்கு முன்பு நான் உணர்ந்த நடுக்கங்கள் இன்னும் என்னை விட்டு அகலவில்லை.எனது பயணம் இப்போதுதான் தொடங்கி இருக்கிறது. சிறப்பான விஷயங்கள் இனிமேல்தான் வர இருக்கின்றன" என்றார்.
மிஸ் இந்தியா பட்டத்தை வென்றதன் மூலம் நிகிதா போர்வால் 73-வது உலக அழகி போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க உள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!