
மே 31ல் ரிலீஸாகும் ‛மல்ஹர் திரைப்படம்
ஒரு கிராமத்தில் நடக்கும் மூன்று கதைகளாக ஒவ்வொரு கதையுடனும் ஒரு தொடர்பு இருப்பது போன்று இந்த படம் உருவாகி உள்ளது. காதல் கலந்த குடும்ப படமாக தயாராகி உள்ளது. ஹிந்தி மற்றும் மராத்தி மொழிகளில் மே 31ம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தயாரிப்பாளர் பிரபுல்லா பசாத் கூறுகையில், ‛‛மல்ஹர் படம் கட்ச் என்ற கிராம பகுதியில் நடக்கும் மூன்று கதைகளின் அற்புதமான சங்கமம் ஆகும். பார்வையாளர்களுக்கு முழுமையான பொழுதுபோக்கு கிடைக்கும் வகையில் படத்தை சுவாரஸ்யமாக எடுத்துள்ளோம். இந்தப் படம் இரண்டு சிறந்த நண்பர்களின் கதையைச் சொல்கிறது"" என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!