
எத்தனை கோடிகள் கொடுத்தாலும் முடியாது : கங்கனா
இது குறித்து தனது சமூக வலைதளத்தில் கங்கனா வெளியிட்டுள்ள பதிவில், ‛‛பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் எத்தனை கோடிகளை கொடுத்தாலும் திருமண விழாக்களில் பாட மாட்டேன் என்று கூறியது போல, நானும் ஒரு கொள்கையை பின்பற்றி வருகிறேன். அதன் காரணமாகவே எத்தனை கோடிகளை கொட்டிக் கொடுத்தாலும் திருமண விழாக்களில் நடனம் ஆடுவதில்லை. பல திருமண விழாக்களில் நடனமாட எனக்கு அழைப்பு வந்த போதும், நான் மறுத்துவிட்டேன். அதோடு விருது நிகழ்ச்சிகளில் கூட நான் நடனம் ஆடுவதில்லை. நல்ல முறையில் பணத்தை உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்பதை இன்றைய இளைய தலைமுறையினர் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தான் இதைச் சொல்கிறேன்"" என்கிறார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!