
இன்று நடந்த தெறி ஹிந்தி ரீமேக் பூஜை
இயக்குனர் அட்லியின் மனைவி பிரியா இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர். காளீஸ்வரன் இயக்கத்தில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா கபி மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள். அனைவரும் இன்றைய பூஜையில் கலந்து கொண்டனர். படத்தின் தலைப்பை விரைவில் அறிவிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்கள்.
இரண்டு தினங்களுக்கு முன்பு தான் கீர்த்தி சுரேஷ் முதன்மைக் கதாநாயகியாக நடிக்கும் "ரகு தாத்தா" டீசரில் "ஹிந்தி தெரியாது போய்யா" என்று வசனம் பேசியிருந்தார். இன்று ஹிந்திப் படத்தில் அவர் கதாநாயகியாக அறிமுகமாகும் படத்தின் பூஜை நடந்துள்ளது. அங்கு சென்று ஹிந்தி தெரியாது என சொல்ல மாட்டார், ஹிந்தியில்தான் பேசியிருப்பார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!