
அமீர்கான் மகள் திருமணத்தில் நவராத்திரி பாரம்பரிய புடவைகளை அணிந்த குடும்பத்தினர்
மணமகன் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் அனைவரும் நவராத்திரி பாரம்பரிய சேலைகளை அணிந்திருந்தனர். இதையடுத்து மணமகன் குடும்பத்தாரை கவுரவப்படுத்தும் விதமாகவும் அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாகவும் தனது இரண்டு முன்னாள் மனைவிகள் உட்பட தனது குடும்பத்தை சேர்ந்த பெண்கள் அனைவரையும் அதேபோன்று நவராத்திரி புடவைகளை அணிந்து விழாவில் கலந்து கொள்ள செய்துள்ளார் அமீர்கான். மணமகன் குடும்பத்தினரைப் போலவே அமீர்கான் குடும்பப் பெண்களும் இப்படி உடை அணிந்து இருந்தது இந்த திருமண நிகழ்விற்கு வந்திருந்த அனைவரையும் ரொம்பவே ஆச்சரியப்பட வைத்தது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!