
ஒப்பனை கலைஞரை மறுமணம் செய்த சல்மான் கான் சகோதரர்
ஆம்.. சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கான் திரைப்பட ஒப்பனை கலைஞரான சுரா கான் என்பவரை திரு(மறு)மணம் செய்து கொண்டுள்ளார். விரைவில் வெளியாக இருக்கும் "பாட்னா சுக்லா" என்கிற படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றியபோது காதல் மலர்ந்து அது இப்போது திருமணத்தில் கை கூடி இருக்கிறது.
இந்த திருமண நிகழ்வில் சல்மான் கான் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். மேலும் பாலிவுட் பிரபலங்களான ரவீனா டாண்டன், ஜெனிலியா, பரா கான் உள்ளிட்ட பல பிரபலங்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!