
பாதயாத்திரையாக திருமலைக்கு நடந்து சென்ற தீபிகா படுகோனே
இந்நிலையில் படம் வெற்றி பெறுவதற்காக தீபிகா படுகோனே திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அவர் தனது குடும்பத்தினருடன் மலைப்பாதையில் உள்ள நடைபாதையில் பாதயாத்திரையாக திருமலைக்கு நடந்து சென்றார். பக்தர்களுடன் இரண்டரை மணி நேரம் நடந்து திருமலையை அடைந்தார். வழிநெடுக படி பூஜையும் செய்தார். நடைபாதையில் நடந்து சென்ற பக்தர்கள் தீபிகாபடுகோனேவுடன் செல்பி எடுத்து கொண்டனர். திருமலை சென்று அடைந்ததும் அங்குள்ள ராதேயம் விருந்தினர் மாளிகையில தங்கினார் பின்னர் நேற்று அதிகாலையில் விஐபி தரிசனத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்தார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!