
கீதா கோவிந்தம் படத்துக்கு முன்பே நண்பர்களாக இருந்த விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா ; ரன்பீர் கபூர் புது தகவல்
இந்த நிலையில் கீதா கோவிந்தம் படத்தில் நடிப்பதற்கு முன்பே அவர்கள் இருவருக்கும் இடையே நட்பு இருந்திருக்கிறது என்கிற தகவலை ஹிந்தி நடிகரும் தற்போது அனிமல் படத்தில் ராஷ்மிகாவுக்கு ஜோடியாக நடித்திருப்பவருமான ரன்பீர் கபூர் தெரிவித்திருக்கிறார்.
தெலுங்கு சேனல் ஒன்றில் நடிகர் பாலகிருஷ்ணா நடத்தி தரும் அன்ஸ்டாப்பபிள் என்கிற ரியாலிட்டி ஷோவில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மற்று இயக்குனர் சந்தீப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய ரன்பீர் கபூர், ‛‛சந்திப் ரெட்டி வங்கா முதன்முதலாக ராஷ்மிகாவை சந்தித்தது அர்ஜுன் ரெட்டி படத்தின் வெற்றிக்காக விஜய் தேவரகொண்டா தனது வீட்டில் கொடுத்த பார்ட்டியின்போது தான் என்று கூறியுள்ளார்.
அர்ஜுன் ரெட்டி படம் வெளியானது 2017 ஆகஸ்ட் மாதம். கீதா கோவிந்தம் படம் வெளியானது 2018 ஆகஸ்ட் மாதம். அதாவது கீதா கோவிந்தம் பட அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே ராஷ்மிகாவும், விஜய் தேவரகொண்டாவும் நட்பாக இருந்திருக்கிறார்கள் என்கிற தகவல் இதன்மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!