
பாலிவுட் இயக்குனர் ராஜ்குமார் கோலி காலமானார்
93 வயதான ராஜ்குமார் கோலி கடந்த 20 வருடங்களாக சினிமாவை விட்டு விலகி குடும்பத்தினருடன் மும்பையில் வசித்து வந்தார். வயது முதிர்வு காரணமாக வரும் உடல்நல பிரச்னைகளுக்காக சிசிக்சை பெற்று வந்தார். இந்தநிலையில் நேற்று குளியலறைக்குச் சென்ற அவர் நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வராததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மகன் அர்மான் கோலி, கதவை உடைத்து உள்ளே சென்றார். அங்கு ராஜ்குமார் கோலி மயங்கி கிடந்தார். உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ராஜ்குமார் கோலியை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மரணமடைந்த ராஜ்குமார் கோலிக்கு பாலிவுட் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!