
சினிமா ஆனது ஷில்பா ஷெட்டி கணவரின் வாழ்க்கை
பின்னர் அவர் ஜாமீனில் வெளியில் வந்தார். அதன் பிறகு அவர் வெளி உலகத்தில் நடமாடவில்லை. இப்போது திடீரென என் கதையை சினிமாவாக எடுத்துள்ளேன். எனது வலியை பாருங்கள் என்று கூறியுள்ளார். "யூடி 69" என்ற பெயரில் தயாராகி உள்ள இந்த படத்தை அவரே இயக்கி, நடித்துள்ளார். நீண்டநாட்களுக்கு பிறகு மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராஜ்குந்த்ரா இதனை தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சியில் அவர் பேசும்போது “என் மீதான நிர்வாண பட வழக்கு குடும்பத்தின் மீது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. கைதான பிறகு சமூக வலைதளத்தில் என்னை கொடூரமாக டிரோல் செய்தார்கள். இது எனக்கு பெரிய அவமானமாக இருந்தது. எனது வாழ்க்கை ஒரு குழப்பமான நிலையில் அர்த்தமற்றதாக மாறிவிட்டது. நான் அனுபவித்த வேதனையின் ஒரு பகுதியை மட்டுமே இந்த படத்தின் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். படம் அடுத்த மாதம் திரைக்கு வர உள்ளது"" என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!