
பூஜா ஹெக்டேவை வரவேற்ற ரோஷன் ஆண்ட்ரூஸ்
இந்த நிலையில் தற்போது அவர் ஒரே ஒரு ஹிந்தி படத்தில் மட்டும் நடித்து வருகிறார். பிரபல மலையாள இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் சாஹித் கபூர் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் தான் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தனது பிறந்தநாளை இதன் படபிடிப்பு தளத்தில் கொண்டாடியுள்ளார் பூஜா ஹெக்டே. இது குறித்த புகைப்படம் ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ், “பூஜா ஹெக்டேவை இந்த படத்தின் கதாநாயகியாக வரவேற்பதற்கும் அவரது பிறந்தநாளை கொண்டாடுவதற்கும் மகிழ்ச்சி அடைகிறோம்” என்று கூறியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!