
பாலிவுட் கவர்ச்சி நடிகைக்கு பிடிவாரண்ட்
ஆனால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க கடைசி நேரத்தில் மறுத்துவிட்டார் ஜரீன் கான். இது தொடர்பாக விழா ஏற்பாட்டாளர்கள் கோல்கட்டாவின் சீல்டா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஜரீன் கானுக்கு எதிராக போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் பல முறை சம்மன் அனுப்பியும் ஜரீன் கான் ஒருமுறை கூட நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால் தற்போது ஜரீன் கானுக்கு நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து ஜரீன் கான் கூறும்போது, ""என் மீதான குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை. விழாவுக்கு முதல் மந்திரி வருவதாக பொய் சொல்லி என்னை அழைத்தனர். அதனால் போகவில்லை. வக்கீலை சந்தித்து பேசிய பிறகு விளக்கம் அளிக்கிறேன்"" என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!