
இந்தியா - பாரத் பெயர் விவகாரம் : படத்தின் டைட்டிலை மாற்றிய அக்ஷய் குமார்
இந்த நிலையில் தொடர்ந்து தேசபக்தி படங்களில் நடிக்கக்கூடிய பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், தற்போது, ‛மிஷன் ராணிகன்ஸ் - தி கிரேட் இந்தியன் ரெஸ்க்யூ" என்ற படத்தில் நடித்துள்ளார். வரும் அக்டோபர் மாதம் இந்த படம் வெளியாக இருக்கிறது. தற்போது இந்தியா பாரத் விவாதம் கிளம்பியுள்ளதை தொடர்ந்து படத்திற்கு, ‛மிஷன் ராணிகன்ஸ் - தி கிரேட் பாரத் ரெஸ்க்யூ" என டைட்டில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல அக்ஷய் குமார் தான் பதிவிடும் டுவீட்டுகளில் எல்லாம் இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என்றே குறிப்பிட்டு வருகிறார். அதேசமயம் படத்தின் நாயகி பரிணிதி சோப்ரா, ‛இந்தியா" என்றே குறிப்பிட்டு வருகிறார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!