
செக் மோசடி வழக்கு : பிடிவாரண்ட்டை அடுத்து கோர்ட்டில் அமிஷா பட்டேல் ஆஜர்
அமிஷா தனது நண்பர் குணால் குரூமர் என்பவருடன் இணைந்து இந்தி படமொன்றை தயாரிக்க முடிவு செய்து அதற்காக அஜய்குமார் சிங் என்பவரிடம் 2.5 கோடி கடன் பெற்றார். படம் திரைக்கு வரும்போது பணத்தை திருப்பி தந்து விடுவதாகவும் கூறியிருந்தார்.ஆனால் படம் திட்டமிட்டபடி திரைக்கு வரவில்லை. இதனால் அஜய்குமார் சிங் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். இதற்காக வட்டியுடன் சேர்த்து 3 கோடிக்கு அமிஷா செக் கொடுத்துள்ளார். அதை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாமல் திரும்பி வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அஜய்குமார் ராஞ்சி நீதிமன்றத்தில் அமிஷா மீது செக் மோசடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அமிஷா பட்டேலுக்கு பல முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இந்த நிலையில் அமிஷா பட்டேல் கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரிடம் நீதிமன்றம் விசாரணை நடத்தியது. இதில் அவர் பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக திருப்பி கொடுத்து விடுகிறேன் என்று கூறியதாக தெரிகிறது. இதையடுத்து அவருக்கு நீதிமன்றம் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!