
துவங்கியது இந்தி பிக்பாஸ் ஓடிடி சீசன்-2 ; சல்மான்கான் கொடுத்த வாக்குறுதி
அதேசமயம் டி ஆர் பி ரேட்டிங்கிற்காக இந்த நிகழ்ச்சியில் சில வரம்பு மீறிய காட்சிகளில் போட்டியாளர்கள் ஈடுபட்டதையும் பார்க்க முடிந்தது. இது பார்வையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் முதல் சீசனை தொகுத்து வழங்கிய பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர் மாற்றப்பட்டு மெயின் சீசன்களை தொகுத்து வழங்கி வரும் சல்மான்கானே இந்த ஓடிடி சீசன்-2ஐயும் தொகுத்து வழங்குகிறார். நேற்று முதல் இந்த நிகழ்ச்சி துவங்கியுள்ளது
இதுகுறித்து அறிமுக விழாவில் பேசிய சல்மான்கான் நமது கலாச்சாரத்திற்கு எதிரான எந்த ஒரு விஷயங்களும் இந்த ஓடிடி சீசனில் நடப்பதற்கு நான் அனுமதிக்க மாட்டேன் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!