
சல்மான்கான் தங்கை வீட்டில் நகை திருட்டு ; வீட்டு பணியாளர் கைது
இந்த நிலையில் தற்போது சந்தீப் ஹெக்டே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரிடம் இருந்து நகைகள் மீட்கப்பட்டு சல்மான்கானின் சகோதரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பாக கடந்த மாதம் இதேபோல பிரபல ஹிந்தி பாடகர் சோனு நிகமின் தந்தை வீட்டிலும் அங்கே பணிபுரிந்த கார் டிரைவர் இதேபோன்று பணத்தை கொள்ளை அடித்து சென்றதும், இங்கே தமிழகத்தில் நடிகர் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யாவின் வீட்டிலும் அங்கே பணிபுரிந்த பெண் இதேபோன்று நகைகளை திருடியதும் பரபரப்பை ஏற்படுத்தி அடங்கிய நிலையில், தற்போது சல்மான்கான் சகோதரி வீட்டில் நடைபெற்ற இந்த திருட்டு சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!