
சல்மான்கானுக்கு சங்கடம் தராமல் புது யுக்தியை கண்டுபிடித்த பூஜா ஹெக்டே
அந்த வகையில் ஒரு நிகழ்ச்சியில் இந்த படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்ட பூஜா ஹெக்டே, “படப்பிடிப்பு தளத்தில் எல்லோரும் சல்மான்கானை "பாய்" என்று மரியாதையாக அழைத்ததால் நானும் பாய் என்றே அவரை அழைத்தேன். ஆனால் சல்மான்கான் அப்படி அழைக்க வேண்டாம் என என்னிடம் கூறியதுடன் சல்மான் என்று தன் பெயரை சொல்லியே அழைக்கும்படி கூறினார். ஆனாலும் அது மரியாதையாக இருக்காது என்பதுடன் என்னால் அப்படி கூப்பிடவும் முடியாது என்பதை உணர்ந்து கொண்டேன். அதனால் எனக்கும் அவருக்கும் சங்கடம் வராத வகையில் அவரது பெயரை சுருக்கி எஸ்.கே என அவரை அழைக்க ஆரம்பித்தேன்” என்று கூறியுள்ளார் பூஜா ஹெக்டே.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!