
வீரம் ஹிந்தி ரீமேக் வெற்றிநடை போடுமா ?
இப்போது ஹிந்தியில் "கிசி கா பாய் கிசி கி ஜான்" என்ற பெயரில் ரீமேக் ஆகி நாளை மறுநாள் ஏப்ரல் 21ம் தேதி வெளியாக உள்ளது. பர்ஹத் சாம்ஜி இயக்கத்தில் சல்மான் கான், வெங்கடேஷ், பூஜா ஹெக்டே, ஜெகபதி பாபு, பூமிகா சாவ்லா, மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.
இப்படத்தின் டிரைலர் பத்து நாட்களுக்கு முன்பு வெளியாகி 42 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. தெலுங்கு கன்னடத்தில் சுமாரான வரவேற்பையும், வசூலையும் மட்டுமே பெற்றது. ஹிந்தியில் சமீப காலங்களில் வெளியான ரீமேக் படங்களுக்குப் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. அஜய் தேவகன் நடித்து வெளியான "கைதி" ஹிந்தி ரீமேக்கான "போலா" கூட தோல்வியடைந்தது.
சல்மானுக்கென்று ஹிந்தியில் தனி வரவேற்பு உண்டு. அதனால், "கிசி கா பாய் கிசி கி ஜான்" வெற்றி நடை போடும் என பாலிவுட்டில் எதிர்பார்க்கிறார்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!