
செக் மோசடி வழக்கில் விஜய் பட நாயகிக்கு வாரண்ட்
கடந்த 2013ல் இவர் தனது பார்ட்னர் ஒருவருடன் சேர்ந்து தேசி மேஜிக் என்கிற படத்தை தயாரிப்பதற்காக இரண்டரை கோடி ரூபாய் கடனாக வாங்கினார் என்றும், இப்போது வரை அதை திருப்பி செலுத்தவில்லை என்றும் ஜார்க்கண்ட்டை சேர்ந்த அஜய் குமார் சிங் என்கிற தயாரிப்பாளர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன் பிறகு 2018ல் ஏற்பட்ட சமரச பேச்சுவார்த்தையை தொடர்ந்து இரண்டரை கோடிக்கும், பின்னர் 50 லட்சத்திற்கும் என இரண்டு காசோலைகளை கொடுத்தார் அமிஷா பட்டேல்.
ஆனால் அவற்றை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லை எனத் திரும்பி விட்டது. இதையடுத்து அவர் மீது செக் மோசடி வழக்கு தொடர்ந்தார் அஜய் குமார் சிங். இதை தொடர்ந்து நீதிமன்றத்தில் பலமுறை ஆஜராக சம்மன் அனுப்பியும் அபிஷா பட்டேல் அதை கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில் அவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு வரும் ஏப்-15ஆம் தேதி அவர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என அவருக்கு வாரண்ட் அனுப்பப்பட்டுள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!