
சினிமாவில் நடிக்கும் பெண் போலீஸ் அதிகாரி
"அலிப்" படத்தில் ஷம்மி என்ற கேரக்டரில் நடித்தார். 2017ம் ஆண்டு அந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. பின்னர் 2019ம் ஆண்டில் வெளியான "நாகாஷ்" என்ற படத்தில் பத்திரிக்கையாளராக நடித்திருந்தார். இவர் கூறுகையில் ""எனக்கு சிறு வயதில் இருந்தே நடனம் மற்றும் நடிப்பு மீது விருப்பம் இருந்தது. சிவில் சர்வீசஸ் பணியில் சேர வேண்டும் என்று நான் நினைத்ததில்லை. அந்த தேர்வை எழுதுவேன் என்று ஒருபோதும் நினைத்ததும் இல்லை. ஆனால் எனது வீட்டின் சூழ்நிலைதான் ஐ.பி.எஸ் ஆக வேண்டும் என்ற விருப்பத்தை எனக்குள் விதைத்தது. தற்போது எனக்குள் இருக்கும் கலை ஆர்வத்தை நிறைவு செய்யும் வகையில் சிறப்பு அனுமதி பெற்று நடித்து வருகிறேன்”. என்கிறார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!