
தெலுங்குப் படத்தில் நடிக்க ஜான்விக்கு இவ்வளவு சம்பளமா?
இப்படத்திற்காக ஜான்விக்கு சம்பளமாக 5 கோடி வழங்கப்படுவதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கில் முன்னணி நடிகைகளின் சம்பளமாக அதிகபட்சமாக 3 கோடி தான் உள்ளது. ஹிந்தியில் இன்னும் முன்னணி நடிகையாக உயராத ஜான்விக்கு 5 கோடி சம்பளம் அதிகம்தான் என்கிறார்கள். அதற்கு உதாரணமாக கியாரா அத்வானிக்கு "ஆர்சி 15" படத்தில் 4 கோடியை வழங்கியதைச் சொல்கிறார்கள். முன்னணி நடிகையான அவருக்கே 4 கோடி எனும் போது ஜான்விக்கு 5 கோடி அதிகமே என்பதுதான் டோலிவுட் கருத்தாக உள்ளது.
அதே சமயம் "புராஜக்ட் கே" படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடிக்கும் தீபிகா படுகோனேக்கு 10 கோடிக்கும் அதிகமான சம்பளம் தந்துள்ளார்களாம்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!